SESAME SEEDS BENEFITS TAMIL CONTENT

எள்ளு பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க ஆங்கிலம்- SEASAME SEED ஆயுர்வேதம்-Til தெலுங்கில்- நூவுலு தாவரவியல் பெயர்- SESAMUM INDICAM என்று அழைக்கிறார்கள். கறுப்பு எள்ளு விதையில் 83% முதல் 90% எண்ணெய் அடங்கியுள்ளது. கருப்பு விதை மிகச்சிறந்தது. தமிழில் எள்ளு எண்ணெயை *நல்ல எண்ணெய்* என்று அழைக்கிறார்கள் வேறு எந்த தாவர எண்ணெய்க்கும் இப்படி ஒரு சிறப்பு பெயர் கிடையாது. இந்த எண்ணெயில் UNSATURATED FATTY ACID மற்றும் விட்டமின்கள், தாது பொருட்கள் (minerals) அடங்கியுள்ளது. எள்ளு விதையின் சிறப்பு அம்சங்கள் ஒவ்வொரு 100 கிராமில் அடங்கியுள்ள சத்துக்கள் vitamin E, vitamin k, மெக்னீசியம், மேலும் அதிக அளவிலான சுண்ணாம்பு சத்து (கால்சியம்). விதையின் மேல் கறுப்புத் தோலில் பாஸ்பரஸ், பொட்டாசியம், சிங், அமைனோ ஆஸிட், பாலிபினால்ஸ், Sesanin மற்றும் Sesamol போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் தோலின் போஷாக்கிற்கு உதவுகிறது. மேலும் இருதய மேம்பாட்டிற்கு இதில் உள்ள தாவர லிக்னன்ஸ்(lignans) என்று என்று சொல்லப்படும் பொருள் உதவுகிறது. அதனால் LDL கொழுப்பு (கெட்ட கொழுப்பு) குறைத்து, இரத்தத்தின் அதிகப்படியான அழுத்தத்தை குறைத்து இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. எள்ளினை தொடர்ந்து உட்கொள்ளுவதால், புதிய எலும்பு வளர்ச்சியும் பலவீனமான எலும்புகளை பலப்படுத்தியும், சரி செய்தும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் சொல்லப்படும் குறைகளை நீக்கி, எலும்பின் திடத்தன்மையை மேம்படுத்தி, எலும்பு முறிவுகளில் இருந்து காப்பாற்றுகிறது. பல் சொத்தையின் தாக்கத்தை குறைக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள குழந்தை இல்லாத நிலையை குணப்படுத்துகிறது. நமது வாழ்வியல் முறைகளில் பல விதங்களில் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது 1. எள்ளு காக்கைக்கு, அமாவாசை போன்ற நாட்களில் வைக்கும் உணவின் மீது சிறிதளவு தூவி வைக்கப்படுகிறது. இதனால் நமது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு, காக்கையினால் போய் சேருகிறது என்று நம்பப்படுகிறது. 2. ஒருவர் உயிர் போகும் தருவாயில், படுக்கையில் இருக்கும்போது எள்ளில் இருந்து எடுக்கப்படும் பாலை அவர்களது வாயில் செலுத்துவார்கள். உடம்பில் உயிர் துடிப்பு இருந்தால் அவர்கள் மீண்டு எழுந்து விடுவார்கள். அப்படி இல்லை எனில் உயிர் பிரிந்து விட்டது என்று கருதப்படும். இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே இருந்து வருகிறது. காலப்போக்கில் மாட்டுப் பால் ஊற்றும் பழக்கம் எப்படியோ மாறிவிட்டது. 3. ஒரு சில சமயங்களில் அதாவது அமாவாசை தர்பணம் விடும் பொழுதும், எள்ளு கலந்த தண்ணீரால், காயத்ரி ஜபம் உச்சரித்து இந்த தண்ணீரை விடுவார்கள். இதுவும் முன்னோர்களை வழிபடும் முறையாகும். நமது கலாசாரத்தில் எள்ளு வைத்தியத்திற்கும், வைதீக முறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பு:- கருப்பு எள்ளு தான் சிறந்தது. வெள்ளை எள்ளில் சத்துகள் மிகக் குறைவு. வாரம் ஒருமுறை எள்ளு எண்ணெய் தலைக்கு தேய்த்துக் குளியல் செய்தால் நன்மை பயக்கும். எள்ளினை எப்படி எல்லாம் உட்கொள்ளலாம் என்று பார்க்க உட்கொள்ளும் முறை 1. எள்ளு எண்ணெய், சித்தா மற்றும் ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கும் வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல மருந்துகளில் அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. 2. எள்ளு உருண்டை 3. முளைகட்டிய எள்ளு 4. எண்ணெய் குளியல் 5. எள்ளில் இருந்து தயாரிக்கப்படும்- இயற்கை எள்ளுப்பால். செய்முறையை விரிவாக பார்க்கலாம் எள்ளு உருண்டை தயாரிக்க தேவையான பொருட்கள் 1. எள்ளு 100 கிராம் 2. நாட்டுச் சர்க்கரை அல்லது மண்டை வெல்லம் 100 கிராம் 3. சிறிதளவு நெய் செய்முறை ஒரு இரும்பு வாணலியில் வெறுமனே வறுத்து நன்கு பொரிக்கவிடவும். எள்ளு நன்கு பொரிக்க வேண்டும்.தீயவிடக் கூடாது. மிதமான தீயில் வறுத்து ஒரு தட்டில் மாற்றி சூடு ஆற வைக்கவேண்டும். அடுத்ததாக பொடி செய்த வெல்லத்தையும் சூடு ஆறிய எள்ளையும் கலந்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து, சற்று சூடு இருக்கும்போதே கையில் நெய்யை நன்கு தடவி உருண்டைகளாக பிடித்து, மூடியுள்ள எவர்சில்வர் டப்பாவில் அடைத்து வைக்கவும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் ஒரு உருண்டை சாப்பிட கொடுக்கவும். அவர்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். முளைகட்டிய எள்ளு தேவையான கருப்பு எள்ளை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். குறைந்தது 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்(காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை). தண்ணீரை பிரித்து பார்த்தால், ஒவ்வொரு எள்ளின் முளையிலும் சிறிய அளவில் வெள்ளை நிறத்தில் முளை விட்டிருக்கும். அதனை அப்படியே ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து நன்கு மென்று சாப்பிடவும். நன்கு மெல்லாமல் சாப்பிட்டால் முழு பயன் கிடைக்காது. நன்கு மென்று சாப்பிடும் நபர்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எள்ளு பால் தேவையான பொருட்கள் கருப்பு எள்ளு-50 கிராம்(மூன்று நபர்களுக்கு போதுமானது) பனைவெல்லம்- 50 கிராம் லவங்கப்பட்டை பொடி- இரண்டு சிட்டிகை அளவு செய்முறை 12 மணி நேரம் முதல் 36 மணி நேரம் அளவிற்கு சுத்தப்படுத்தப்பட்ட எள்ளினை மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும். இதற்கு இடையில் தண்ணீரை இரண்டு முறை மாற்றி ஊறவைக்கவும். ஊறவைத்த எள்ளில் நன்கு, சிறிய அளவில் முளைவிட்டு இருக்கும். வேறு தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் எடுத்து நன்கு அரைக்கவும்.(சுமார் 200ml தண்ணீர் தேவைப்படும்) விட்டு விட்டு அரைக்கவும். ஒவ்வொரு முறையும் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மிக்ஸி சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளவும். அப்படியே 200ml தண்ணீரை ஊற்றி அரைத்து முடித்து, நைலான் பைய்யில் அல்லது stainless steel ஆன வடிகட்டி மூலம், வடிகட்டி நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அந்த பாலில் கரைத்து, வடிகட்டிய பனை வெல்லத்தை சேர்த்து கலக்கவும். Double boiling methodல் சூடுபடுத்தவும். Double boiling method என்பது, எள்ளு பாலை, சிறிய பாத்திரத்தில் எடுக்கவும். பெரிய அகலமான பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி, எள்ளு பாலையும் அந்த பாத்திரத்தில் வைத்து சூடு படுத்தவும். தண்ணீரை கொதிக்க விடாமல் சிறிய தீயில் வைத்து, எள்ளு பால் வெதுவெதுப்பான சூடு அடைந்தவுடன் தீயை அணைத்து விடவும். பிறகு ஒவ்வொரு டம்ளரில் அதை மூன்றாக பிரித்து, 2 அல்லது 3 சிட்டிகை லவங்க பொடியை மேலாக தூவி, பருக கொடுக்கவும். மிகவும் சத்தான பால். எல்லா வயதினரும் வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். 12 வயது குறைவான சிறுவர்களுக்கு 50ml எள்ளு பால் கொடுக்கலாம். குடிக்க சுவையான இயற்கை பால். மாட்டுப்பாலை முற்றிலும் தவிர்க்கவும். மாட்டுப் பாலை விட பல மடங்கு சுண்ணாம்பு சத்து, மற்ற சத்துக்களும் நிறைந்தது. தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த இயற்கை மருந்து எள்ளு எண்ணெய் தலை குளியல் செய்வதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் எண்ணெய் குளியல் செய்து வருவது நமது வாழ்வியலில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாக இருந்துள்ளது. காலப்போக்கில் மறைந்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். (ஷாம்பூ உபயோகிக்க கூடாது) பச்சை பயிறு மிஷினில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரமாவது உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு பறக்க எண்ணெய் தேய்த்து ஊற வேண்டும். பச்சைபயிறு மாவில் தேவையான அளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்தால், பசை உள்ள பொருளாக மாறும். அதை உபயோகப்படுத்தி உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால், எண்ணெய் பசை போய்விடும். முடிந்த அளவில் எண்ணெய் குளியல் சமயத்தில் சோப்பி பயன்படுத்துவதை தவிர்க்கவும். எண்ணெய் குளியலில் உடல் சூடு மிகவும் குறையும். உடல் சற்று தளர்ந்து இருக்கும். பகல் தூக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.